இனிய இல்லறம்
இரு மனங்கள் ஓர் மனமாய் இனைந்து இல்லறத்தில் புகும் தருணம் திருமணம் . திருமணம் மணமாய் மணம் வீச இரு மனங்களும் மன முதிர்ச்சியுடன் செயல் பட்டால் வாழ்க்கை ஆல மரமாய் தழைக்கும்.
ஒரு ஆணின் கனவு தன் மனைவி ஒரு நல்ல இல்லாளாக இருக்க வேண்டும், விட்டு கொடுக்க வேண்டும், அனுசரித்து நடக்க வேண்டும், . உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும் என்பது தான்.
பெண்ணின் கனவு தன் கணவன் தன்னை எந்த சமயத்திலும் விட்டு கொடுக்க கூடாது, தன்னை பாது காக்க வேண்டும் . தன்னை ஏற்று கொள்ள வேண்டும் என்பது தான்.
இந்த இரண்டு எதிர் பார்ப்புகளும் சராசரியாய் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆனால் இன்றைய நடை முறை ....................
ஆதிக்கம், ஆளுமை, அடிமைத்தனம் இவை தான் மேலோங்கி உள்ளது .
நீயா? நானா ? இந்த கேள்விக்கு எந்த பட்டி மன்றத்திலும் தீர்ப்பு அளிக்க முடியாது.
ஒன்று ஆண் ஆதிக்கம் அல்லது பெண் ஆதிக்கம் . ஆதிக்கம் அதிகமாக அன்பு தொலைகின்றது. அன்பு தொலைவதால் அகம் பாதிக்க படுகின்றது .
======== விளைவுகள் :============
மன உளைச்சல்
மன சோர்வு
மன அழுத்தம்
மன நிலை பாதிப்பு
நடை பிணமாய் நடமாடும் கணவன் மனைவி இன்று ஏராளம் .
முதலில் வாழ்க்கை என்பது ஒவ்வொருக்கும் ஒரு அனுபவம் என்பதை த பெற்றோர்கள் திருமணம் ஆகும் போது ஒவ்வொரு பெண்ணிடம் எடுத்து உரைத்தால் வாழ்க்கையை கனவுலகத்தில் பார்க்கமால் யதார்த்தமாய் ஏற்கும் பக்குவம் வரும். ஒவ்வொரு தாயும் தன் பெண்ணை இல்லற பராமரிப்பில் பங்கு ஏற்று கொள்ள வைத்து பொறுப்புகளை சுமக்க வைத்து, அவ்வபோது ஆலோசனைகளை கேட்டு தான் ஒரு முன் உதாரணமாய் நடக்கும் போது மறு வீட்டிற்கு செல்லும் பெண் எந்த ஒரு சூழ்நிலையையும் சுமுகமாய் கையாளும் தன்மையை பெறுவாள் ஒரு நல்ல தோழியாய் அவளை அரவணைத்து நடத்தி சென்றால் அன்பை என்றும் வெளி காட்டுவாள் .
அதே போல் ஆணும் விதி விலக்கல்ல . ஒவ்வொரு ஆணும் பொறுப்புகளை சுமக்க வேண்டும் . வாழ்க்கையில் தன் பங்கை சரி வர செய்ய வேண்டும் . ஒரு உயர்ந்த நிர்வாகியாய் வாழ்க்கையை எந்த பரிமானத்திலும் கையாளும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
இப்போது பெருகி வரும் பிரிவுகள் மன வலியை அளிக்கின்றது.
பிரிவுகளின் மூல காரணம் என்ன என்பதை ஆய்ந்தால்
நான் மதிக்கப்படவில்லை
நான் ஏற்று கொள்ள படவில்லை
நான் கருத்தை கூற அனுமதிக்க படவில்லை
நான் குற்றவாளி கூண்டில் ஏற்ற படுகின்றேன்
எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்க பட வில்லை
இன்னும் கூர்ந்து ஆய்ந்தால் ஆங்கிலத்தில் self esteem என கூறுவார்கள் "சுய மதிப்பு " இது குறையும் போது பெருகுகின்றது பல பிரச்சினைகள்.
மன பக்குவம் இல்லாததால் ஆயிரமாயிரம் பிரச்சினைகள்
மனதை அடக்கி எண்ணங்களின் வலிமையால் எதையும் சாதிக்கலாம்.
பழுத்த மரம் எப்போதும் தாழ்ந்து வளைந்து நிற்கும். அதை போலவே நாமும் பணிவோடு நம் கடமையை சரி வர பணியாற்றினால் அன்பு மேலோங்கி இல்லறம் இனிக்கும் .
ஆளுமையையும் ஆதிக்கத்தையும் அறவே ஒழித்து மன முதிர்ச்சியோடு மண வாழ்க்கையை மணமாய் வாழ முயற்சிப்போம் ! .
==கிருபா காணேஷ் ====