பணமே ஓ பணமே

இன்றைய துரித உலக ஓட்டத்தில் இதயமும் துரிதமாய் மருத்துவர்களை காதலித்து ஓட பழகி கொண்டு விட்டது. ஓட்டம் ! ஓட்டம் !! மாரத்தான் ஓட்டம் ! சீரான ஓட்டமல்ல ! சிதறும் ஓட்டம் !.

பணத்தின் பின் பேயாய் ஓட்டம் ! கருவறையிலிருந்து கல்லறை வரை பிரணவ மந்திரம் பணம் தான் ........

பிறக்க மருத்துவர்களுக்கு பணம் !
இறந்தால் மின்சார சவ பெட்டிக்கு பணம் !
இடைப்பட்ட வாழ்க்கையில்
கல்விக்கு பணம் !
வேலை பெறுவதற்கு பணம் !
திருமணத்தில் பெண்ணை விற்க பணம்!
வாழ்க்கையில் வாழ்ந்தால் வசதியாய் வாழ பணம் !
வாழ்க்கையில் பிரிந்தால் வக்கீல்களுக்கு பணம் !
மருத்துவர்களுக்கு பணம் போனஸ் !

பணம் அச்சடிக்கப்படும் ஒரு தாள் தான் எனினும்
இது மனிதர்களை பாடாய் படுத்தி கொண்டு இருக்கின்றதே !

இயற்கை சிதைந்து செயற்கை இயற்கையாய் மாறி கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில்
சுவாசிப்பதும் கூட வர்த்தகமாகும் நாள் விரைவில் ............ அதற்கு முன்


வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் வாழ்வோம் !

நண்பர்களை பெருக்குவோம் !
நல் எண்ணங்களை சுமப்போம்!
தினமும் நம்மால் ஆன உதவிகளை பிறருக்கு செய்வோம் !
நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களையும் பாராட்டுவோம் !
நம்மை நாமே நேசிப்போம் !
பணத்தின் பின் ஓடாமல்
நல் மனதை அடித்தளமாக்கி
நலமாய் சுவாசிப்போம் !

============================கிருபா கணேஷ் ==========================

எழுதியவர் : kirupaganesh (19-Feb-15, 11:46 pm)
Tanglish : paname o paname
பார்வை : 271

சிறந்த கட்டுரைகள்

மேலே