குழந்தைகள் தேசம் 6

பசும் பால்
சத்தான ஆகாரம்!!....
தாய்ப்பால்
சகலத்திற்கும் ஆதாரம்!!.....

காற்றின்
அழுத்தம் தாங்காமல்
வெடிக்கிறது பலூன்!!....
மன அழுத்தத்தை
மறைக்க முடியாமல்
அழுகிறது குழந்தை?!.....

எழுதுகோல்களில்
அக்கினிச்சிறகுகள்
முளைக்கின்ற தேசம்!!....
குழந்தைகளின் தேசம்!!.....

விடுமுறை நாள்
குழந்தைகள் தேசத்தில்
இல்லவே இல்லை?!.....

தாலாட்டும்
உரிமையை
யாருக்கும்
விட்டுக் கொடுப்பதில்லை
"தொட்டில்கள்"

கொஞ்ச நஞ்சம்
மிச்சம் மீதி
எக்கசக்கமாய்
குழந்தைகள் தேசத்தில்?!.....

எழுதியவர் : வைகை அழகரசு (20-Feb-15, 1:26 pm)
பார்வை : 107

மேலே