குழந்தைகள் தேசம் 5

ஆண்டவனுக்கு விடுக்கப்பட்ட
அழைப்புகளைக் காட்டிலும்....
அம்மாக்களுக்கு விடுக்கப்பட்ட
அழைப்புகளே அதிகம்!!.... அதிகம்!!.....

இன்பத்தைக் கூட்டிக் கூட்டும்
துன்பத்தை கழித்து அழித்து
அறவே ஒழிக்கும்?!......
குழந்தைகளின் பாசம்!!.....

கவலைகளையும்
வலிகளின் ரணங்களையும்
மறக்கடிக்கிறது - மழலையின்
'அம்மா" என்கிற முதல் அழைப்பு!!.....

மழலையின்
சிருங்கார சிரிப்பின் சிலிர்ப்பில்
அலங்காரம்
அலங்கோலமானாலும்
பரவாயில்லை தானே?!......

குழந்தைகளின்
சுற்று வட்டப்பாதையை
பற்ற மறுக்கும் பெற்றோர்களுக்கு
பேரின்பதேசம் பெருங்கனவே?!.....

ஆனா.... ஆவன்னா....
தோசையைக் காட்டிலும்
அந்நிய மொழி தோசைக்கே
அம்மாக்களிடம் ஆதரவு அதிகம்?!.....

பல முறை
அழைப்பு விடுத்தும்
வராத "நிலா"
வந்தாலும் வரலாம்!!.....
உழக்கைக் கை பாட்டியோடு
குழந்தையின் நெற்றிப் பொட்டில்
முத்தம் தருவதற்கு?!.....

எழுதியவர் : வைகை அழகரசு (20-Feb-15, 1:14 pm)
பார்வை : 99

மேலே