பாசம் புரியா மரமண்டைகளே கொஞ்சம் கேளுங்கள் ----உதயா-----

செல்வபுரம் எனும் கிராமத்துல மணி -சாந்தி அவர்களுக்கு முதல் முதலில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது அக்குழந்தைக்கு பெயர்வைக்க மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள் குறித்தனர் . குழந்தையை பெயர்வைக்கும் நாளில் ஊரே திரண்டி இருந்தது . ஆனால் அந்த நாளில் மணி அவர்களின் அண்ணன் இறந்து விட்டார் . சரி என்ன செய்வது என பெயர் வைப்பதை தள்ளி வெச்சிட்டு அண்ணனோட இறுதி சடங்குக்கு போயிட்டாங்க . மறுபடியும் ஒரு மூன்று மாதம் கழிச்சி பெயர்வைக்க ஒரு நாள் குறிச்சாங்க அன்னிகினு பார்த்து மணியோட அம்மா கிழே விழுந்துட்டாங்க ..

மணியோட அம்மா அந்த குழந்தையா பார்த்து திட்டுனாங்க சனியன் புடிச்ச சனியன் வந்து குழந்தையா பொறந்து இருக்குப்பாருனு .. மனம் உடைந்து போன மணி தன் மனைவியிடம் சொன்னார் சாந்தி குழந்தையை எடுத்துட்டு வந்து சாமிக்கு முன்னாடி போடுன்னு .

யாருமே வெக்காத பெயரை தன் குழந்தைக்கு வைத்தார் வீராசாமி அய்யன் பாண்டியன் .. ..பாண்டியனுக்கு பிறகு ஒரு தம்பி இரண்டு தங்கைகள் உள்ளனர் ..

பாண்டியன் படிப்பில் அதிகம் மதிப்பெண் பெற்றபோது ஆசிரியர்கள் ஊர்மக்கள் என அனைவரும் பாராட்டினார்கள் ஆனால் அவள் பெற்ற தந்தை மட்டும் பாராட்டவே இல்லை ..நாடகத்தில் கட்டப் பொம்மன் வேஷம் போட்டு அருமையாக நடித்தபோது ஊரே அவரை தலைமேல் வைத்துக் கொண்டாடியது அப்போது கூட அவரது தந்தை பாராட்டவே இல்லை ..மனதில் வருத்தமும் பாண்டியனுக்கு அதிகரித்தது ..

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலே முதல் இடம் பிடித்தார் பாண்டியான் .. அப்போது கூட அவரது தந்தை பாராட்டவே இல்லை மனமுடைந்து வீட்டை விட்டு ஈரோட்டுக்கு சென்றுவிட்டார் அங்கு சென்று ஒரு கம்பனியில் வேலை செய்தார் .தன் அம்மாவுடன் வாரத்திற்கு ஒருமுறை அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார் . இப்படியே மூன்று வருடங்கள் கடந்துன ஒருநாள் திடீரென மனமாறி வீடு திரும்பினார் ...

தன் தம்பிக்கு தங்கைக்கு அம்மாவுக்கு என எல்லாருக்கும் புது துணிகள் வாங்கி வந்தார் .மணி வீட்டுக்குள்ளே வந்தார் அவன் வந்துடான என கேட்டார் .ம்ம் வந்துடானு சொன்னங்க . எல்லாருக்கு துணி வாங்கிட்டு வந்தானானு கேட்டார் வாங்கிட்டு வந்தான் . எனக்கு வாங்கிட்டு வந்தானா என கேட்டார் சாந்தி இல்லன்னு சொன்னால் .

சரி அவ சம்பாரித்த சம்பளத்துல இருந்து ஒரு 200 ரூபாய் எடுத்துக் கொடுன்னு சொன்னார் மணி . ஏங்கனு சாந்தி கேட்டாள் அவ சம்பளத்துல ஒரு சட்ட வாங்கிப் போடணும்னு சொன்னார் மணி . அப்போதுதான் அவர் தன் மகன்மேல் கொண்ட பாசம் சாந்திக்கு புரிந்தது

மணிக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகம் அதனால் அவருக்கு நுரையிரம் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் படுத்திருந்தார் ..

அப்போது அவர் தன் மகன் பாண்டியனை அழைத்தார் .. அவர் அப்போதுதான் சொன்னார் பாண்டியா நீ பரிசுகள் சாதனை பெரும் போதும் நான் உன்னை பாராட்டினால் அதுவே உனக்கு சாபாமாய் போயிடுமோ என நினைத்துதான் நான் உன்னை பாராட்டவே இல்லை என சொல்லி அழுதார் அப்போதுதான் அந்த பாண்டியனின் மரமண்டைக்கு புரிந்தது தன் தந்தையின் பாசம் என்னவென்று ..இருந்தும் என்ன செய்வது .. அவர் அந்த கடைசி வார்த்தையோடு இறந்துவிட்டாரே ...

தன் தந்தையின் பாசத்தை உணர்ந்து அழுதார் கதறினார் பாண்டியன் .. தன் குடும்பத்தைக் காப்பாற்ற சாந்தி ஒரு பெட்டிக் கடையை வைத்து தன்குடும்பத்தை காப்பாற்றி தன் செல்வங்களை படிக்கவைத்து நல்லநிலைக்கு கொண்டுவந்தார்

பாண்டியனுக்கு ஒரு பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது .. அந்த மேடையில் அவரது பேச்சி உலகமே அந்நிகழ்ச்சியை பார்த்து அழுதது ....

உலகமறிய அப்பா என்ன மன்னிசிடுங்க அப்பா வாங்க அப்பா வாங்க என கத்துனார் கதரினார் ...அந்த பிரம்மாண்ட மேடையிலே தன் தாயின் காலினை பற்றி அழுதார் ....

இருந்தும் என்ன பயன் மறைந்த தந்தை வராவ போகிறார் .........

((( என் உறவுகளே என் உயிருக்கும் மேலான நட்புகளே ... தயவு செய்து தாய் தந்தையின் செயலைக் கண்டு வருந்தாதிர் அவர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டுயென மறவாதீர்கள் ...))

எழுதியவர் : udayakumar (22-Feb-15, 1:00 pm)
பார்வை : 416

மேலே