பலம் எது பலவீனம் எது

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.

அனைத்து விலங்குகளும்ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன.அங்கே வசித்த

மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக் கொண்டே இருந்தது.

உதாரணத்திற்கு,

யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத் துவங்கியது.

அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத் துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது.

மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷபட்டிருக்கிறாயா என்றது,

மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லைஎன்று பதில் கூறியது.

இதனை கேட்டு சிரித்த மைனா,

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்னஎன்பதைஉணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும்.அதை விட்டு எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

தன் தவறைஉணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.

இந்தக் கதை நமக்கு அறிவுறுத்துவது யாதெனில்.,

மனிதனின் பலவீனம் என்பது உணர்வுகளுக்கு அடிமைப்படுவது.

அதற்கு ஒப்பீடு செய்யும் மனப்பான்மை அடித்தளமாக அமைகின்றது.

அப்படியானால் மனிதனின் பலம் எது?

மனிதனிடம் பலவீனம் சார்ந்த உணர்வுகள் இருப்பது போல்

பலம் சார்ந்த உணர்வுகள் எவையும் இல்லை.

ஆனால் நாம் பலமான மனிதராக இருப்பதற்கு

ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.

ஒப்பீடு செய்வதை முழுமையாகத் தவிர்ப்பது தான் அந்த வழி .

ஏனெனில் எம்மைப் பலவீனமாக்கும் உணர்வுகளுக்கு நாம்

அடிமையாகாத போது இயல்பாகவே நாம்

பலமானவர்களாகி விடுகின்றோம்.,

ஆம்.,நண்பர்களே.,

நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி

நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டும்..

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (24-Feb-15, 9:29 pm)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 300

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே