தோழியின் மாற்றம்

தோழியின் மாற்றம்

நேற்று நான் எனது தோழி தேவியின் இல்லத்திற்கு சென்ற பொழுது என் தோழி தேவியின் குரல் வாசல் வரை கணீர் என்று கேட்டது . கதவு திறந்தே இருந்தது நான் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தது கூட தெரியாமல் என் தோழி உள்ளே வேலைக்காரியிடம் பேசிக்கொண்டிருந்தால் .

நானும் என்னதான் அப்படி தலை போகிற விஷயம் பேசுகிறாள் என கவனிக்க ஆரம்பித்தேன் . அவள் வேலைகரியிடம் கலா நீ இப்ப வர வர வேலை ஒழுங்காவே செய்ய மாட்டேங்குற எல்லாம் அரை குறை என பாட்டு பாடிக்கொண்டிருந்தால் (அதாவது திட்டிக்கொண்டிருந்தால் )

பத்து நிமிடம் கழித்து ஹாலுக்கு வந்தவள் நான் அங்கு அமர்ந்திருப்பதை பார்த்து வா வா மலர் எப்படி இருக்க இப்பதான் என் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா என குசலம் விசாரித்தால் . நானும் அவளும் பால்ய சினேகிதிகள் .ஒரே ஊரை சேர்ந்தவர்கள் .சில பல விஷயங்களை பேசி முடித்தவுடன் அவள் உள்ளே திரும்பி கலா இரண்டு கிளாஸ் சாத்துக்குடி ஜூஸ் கொண்டுவாம்மா என்றாள்.

நான் யாரு கலா என்றேன் .தேவி அதற்கு அவள் எனது புது வேலையாள் ஒரு மாதம் ஆகிறது பணியில் சேர்ந்து என கலாவை பற்றிய விவரங்களை கூற தொடங்கினால். அதானே பார்த்தேன் நான் போன மதம் வந்த பொழுது ராகினி இருந்தாலே என்றேன்.ஆமாம் அவள் சரியாக செய்யவில்லை என்று மாற்றி விட்டேன் என்றாள். என் தோழியின் நடவடிக்கை என்னை வியக்க செய்தது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான் அவர்கள் இல்லத்தில் புது வேலையாட்களை பார்கிறேன் .

கலா எங்களுக்கு குளிர்பானம் கொண்டு வந்தால். பார்பதற்கு மிக அழகாகவும் சாதுவாகவும் இருந்தால்.இவளையா இவள் இப்படி சொல்கிறாள் என்று எண்ணியவாறு குளிர்பானத்தை குடித்து முடித்தேன்.நான் என் தோழி தேவியிடம் கலா என்ன என்ன வேலை செய்வாள் உனக்கு அதில் எது எது பிடிப்பதில்லை என்று கேட்டேன்.அதற்கு அவள் வந்து பத்து இருபது நாட்கள் எல்லா வேலைகளையும் அவள் நன்றாக தான் செய்தாள் இப்பொழுது இவளும் மற்றவர்களை போல் செய்ய ஆரம்பித்து விட்டால் என்றாள்.

நான் என் தோழியின் கன்னத்தை தட்டி கலாவின் டெய்லி பணிகளை பட்டியலிட சொன்னேன்.
கலை 6.30 மணிக்கு கோலம் போடுதல் பால் காய்ச்சுவது காபி கலப்பது டிபன் மதிய உணவு தயாரிப்பது குழந்தைகளுக்கு பாக்ஸில் எடுத்து வைப்பது துணியை வாஷிங்க்மெசினில் போடுவது எடுத்து உலர்த்துவது மாலை பள்ளியில் இருந்து குழந்தைகளை கூட்டி கொண்டு வருவது அவர்களுக்கு தின்பண்டம் கொடுப்பது மாலை தேநீர் தயாரிப்பது பிறகு இரவு உணவு இது அவளுடைய வேலை நான் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பேன் என்றாள் பெருமையாக..

கலா அவர்களது இல்லத்திலேயே தங்கி பணி செய்வதால் அவளுக்கு ஓய்வே இல்லை. இதை கேட்ட எனக்கே ஒரு நிமிடம் தூக்கிவாரி போட்டது. பாவம் அவள் எவ்ளவு வேலைகளை முகம் சுழிக்காமல் செய்கிறாள் என்று. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கு போதே அவள் மதிய உணவு தயாரித்து எங்களை சாப்பிட அழைத்தால் . நானும் எனது தோழியும் சாப்பிடஅமர்ந்தோம் .அவள் செய்திருந்த மிளகு ரசம் வெங்காய சாம்பார் புடலங்காய் கூட்டு அமிர்தமாய் இருந்தது எனக்கு ....

என் தோழியோ கலா இந்த மிளகு ரசம் இன்னும் கொஞ்சம் நெய் தாளித்திருந்தால் சுவை அபாரமா இருந்திருக்கும் ...இந்த புடலங்காய் கூட கொஞ்சம் பாசி பருப்பு சேர்த்து குக்கர்ல வேக வெச்சு இருந்தா நல்லா வெந்து இருக்கும் என சில குறைகளை சுட்டி காட்டி கொண்டே சாப்பிட்டாள்.கலா சரியம்மா அடுத்தமுறை அவ்வாறு செய்கிறேன் என்றாள் . எனக்கு கலாவை மிகவும் பிடித்து விட்டது அவள் பணத்திற்காக வேலை செய்யவில்லை திருப்திக்காக செய்கிறாள் என்பதை உணர்ந்தேன்.

நான் என் தோழியிடம் பண்டிகை நாட்களில் நம் வீட்டு பணியை நாமே செய்தாள் மிகுந்த பலன் கிடைக்கும் ஒரு இரண்டு நாள் நீ கலாவை அவள் சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு நீயே செய் என்று கூறி புறப்பட்டேன். என் தோழியும் கடவுள் அருள் பெற கலாவிற்கு பணம் துணிமணிகளை கொடுத்து இரண்டு நாள் விடுப்பும் கொடுத்தாள் .. அந்த இரண்டு நாட்களில் அவளால் எந்த பணியையும் முழுமையை செய்ய முடியவில்லை ...அடுத்த இரண்டு நாட்களில் அவள் என்னை தொலைபேசில் தொடர்பு கொண்டு மூச்சு வாங்க என்னிடம் மலர் எனக்கு இப்பொழுதுதான் புரிந்தது கலா எவ்ளவு அழகாக வீட்டை பராமரித்து எங்களுக்கு உணவு தயாரித்து மகிழ்விக்கிறாள் என்று இனி குறை காணாது நான் மாதம் இரு தினம் அவளுக்கும் சேர்த்து சமைத்து வீட்டை பராமரிக்க போகிறேன் என்றாள்.இந்த பண்டிகை தினத்தில் உண்மையாகவே எனக்கு கடவுள் அருள் கிடைத்துள்ளது என்றாள் ...

புரிதல் வந்த பின்னே -அங்கு
பூவாசம் வீசும் என்பதில் சந்தேகம் இல்லை....

என் மனம் குளிர்ந்தது நிறைவாய்...

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (25-Feb-15, 2:10 pm)
Tanglish : THOZHIYIN maatram
பார்வை : 292

மேலே