உயிர் தர நானிருக்கிறேன்

மூளையற்ற மனிதர்கள்
மரங்களை அழிக்கின்றனர்!
மனிதன் வாழவே
மரங்கள் பல விதங்களில் தேவை!
உன் மூச்சில் ஆக்ஸிஜனை நிரப்பி,
உன் வயிற்றுக்கு உணவை நிரப்பி,
உன் இருப்பிடத்தையும் நிரப்பி,
உன் குடிநீர் தேவையை நிரப்பி,
உன் இறுதி யாத்திரை வரை
உன்னுடனே வரும் மரங்களை
நீ அழிப்பதனால் தான்
உன் உருவிலும்,உன் மூளையுமாக
நான் கத்தரிக்கப்பட்டிருக்கிறேன்.
உணர்ந்துகொள் மனிதா
உயிர்ப் பெற்றுக்கொள்!
தர நானிருக்கிறேன்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (25-Feb-15, 9:09 pm)
பார்வை : 84

மேலே