வாழ்க்கை துணை என்னும் இனியவளே

தனியாக பிறந்த எனக்காக துணையாக வந்தவளே ..
இரு விழி ஒரு பார்வை போல இரு உடல் ஒரு உயிராக இருப்பவளே ...
என்னை நானே மறந்தாலும் என்னை நினைத்து கொண்டே இருப்பவளே ...
நான் வெளியே சென்று வரும் வரை என் வருகைக்காக தவம் இருப்பவளே ...
நான் கண் கொண்டு பார்ப்பதே எல்லாம் என் எண்ணம் கண்டு செயல்படுபவளே ...
உலகமே இன்று அழியும் என்றாலும் உன்னோடு வாழும் இந்த ஜென்மம் எனக்கு வேண்டும் என்று கேட்பவளே ....
என் காதல் முழுவதும் அன்பு பரிசாக பெற்ற என் துணையவளே....