தமிழச்சியே
பெண்ணே
எப்போதும்
நீ
பூஜை மலராக
இருக்கவே
ஆசைப்படு
அதை விட்டு
மேசை மீது
சோடிக்கப்பட்ட
அலங்கார மலராக இருக்க
ஆசைப்படாதே
காட்சிப்பொருளாக
மாறிவிடுவாய்
உனக்கென்று
இங்கு மதிப்புண்டு
அதற்கென்றும்
தனி சிறப்புண்டு
உன்னை
நீயே
வீழ்த்திச் செல்லாதே
தாழ்த்திக் கொள்ளாதே
நம் தமிழ் கலாச்சாரம்
உன்னை நம்பி !