உன் உலகு

நெகிழியை நீயும் நினைக்காதே

நெஞ்சினில் புகையை நுழைக்காதே

வாகனப் புகையைக் குறைத்துக் கொள்

வான்மழை அதனை நினைத்துக் கொள்

நிலையாய் இல்லை கால நிலை

நினைவினில் இல்லை புவியின் நிலை

காடுகள் தோரும் வீடுகளே

தீயினில் விழுந்தன நாடுகளே

பசுமைக் காடுகள் வேண்டுமடா

அதன் பயனை நீயும் பாருமடா

சூழலை நீயும் பார்த்துக்கொள்

சுமைகளை எல்லாம் தீர்த்துக் கொள்

எழுதியவர் : இளங்கோ செ (27-Feb-15, 9:17 pm)
சேர்த்தது : இளங்கோ செ
Tanglish : un Ulaku
பார்வை : 83

மேலே