இந்தியாவும் இந்தியனும்

உழைப்பின் மறு பெயர் இந்தியன்
உண்மையின் உயர்வும் இந்தியன்
மேல் முக்கோணம் மேய மலையும்
கீழ் முக்கோணம் பேரலையும்

வளங்கள் இதனின் பிறப்பிடமாம்
வானம் இதற்கு வளைந்திடுமாம்
வீதியோர்க் கெல்லாம் விருந்தோம்பல்
வித விதமான விருந்துடனே

நிலவினைக் கட்டி இழுதிடுவர்
நீரினைப் பாய்ச்சி உழுதிடுவர்
வந்தவர்க் கெல்லாம் வாழ்வுண்டு
வாழ்வினைத் தடுத்தால் வாளுண்டு

நீதியும் நீரும் நிரந்தரமே - அவற்றின்
நிலையினில் இல்லை கலப்படமே
அழகிய பாட்டின் அரங்கேற்றம்
அனைவரும் காண அவையேரும்

நண்பன் இவர்களின் நரம்பாவான்
நதி போல் நலத்தைப் பாய்ச்சிடுவான்
கதையினில் உண்டு கருத்தாழம்
கவிதையில் உண்டு கடலாழம்

உதவிகள் பலவும் செய்திடுவர்
உடனே அதையும் மறந்திடுவர்
நாவினில் உண்டு நாவடக்கம்
மனிதரில் உண்டு தன்னடக்கம்



பெருமை கொள்வோம் இந்தியன் என்பதிலே

எழுதியவர் : இளங்கோ செ (27-Feb-15, 9:37 pm)
சேர்த்தது : இளங்கோ செ
பார்வை : 60

மேலே