கோடுகள் -ரகு

அளவையிராத ஒரு பெருங்கோடு
என் அவசிய நாழிகைகளைக்
கடத்திக்கொண்டிருந்தது

மீண்டும் மீண்டும் முயற்சித்ததில்
காகிதங்களாய் இரைந்துகிடந்தன
கோடுகள் என் அறைமுழுவதும்

நேர்கோட்டில் தோராயமானப்
புள்ளிகளிட்டுக் கோடிழுக்கிறேன்
இதுவேக் கடைசியென

சிறுசிறு பிசுருதட்டி
இதயத்துடிப்பை எகிறச்செய்து
பல்லிளித்தது அந்தக் கோடும்

நினைவுகளில் பரபரத்த
அடுத்தடுத்த வேலைப்பளுக்கள் வேறு
வியர்க்க வைத்தன

விழிகள் மூடி சிறிது
ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்
என்னை

பிறகு தொடங்கிய அந்தக்கோடு
எதிர்பார்த்திராதவாறு
மிக நேர்த்தியாக அமைந்தது

முதலில் உன்னை
உன்வசப்படுத்து பிறகு
எல்லாமே உன் வசப்படும்

உரக்கக் கத்தின
இரைந்துகிடந்தப் பிறக்கோடுகள்!

எழுதியவர் : அ.ரகு (28-Feb-15, 10:32 am)
பார்வை : 159

மேலே