வலி
என் காதலரின் காலில் சின்னதாய் காயம் !
என் இதயத்திலோ பாறை அளவு வலி !
எங்கு வைத்து மறைத்தேன் இத்தனை நேசத்தை ?
உன் கண்களை பார்க்கும் போதே, கொட்டி விடுகிறேன்
அத்தனை பாசத்தை ..
எனக்கு மட்டுமே வேண்டும் உன் காதல் என்றென்றும்
தருவாயா ?
எனக்கு மட்டுமே வேண்டும் உன் வார்த்தைகள் அதை
தருவாயா ?
என் காதலரின் காலில் சின்னதாய் காயம் !
என் இதயத்திலோ பாறை அளவு வலி !
சாருமதி