என்ன ஆச்சு நம்ம ஊருக்கு

என் கை விரல்கள்
ஏன் இன்று
என்னோடு
ஒத்துழைத்து
எழுத மறுக்கின்றன.?

என் கண்கள்
ஏன் இன்று
விட்டத்தையே
வெறித்து பார்க்கின்றன..?

என் கால்கள் கூட
ஏன் இன்று
அடுத்த அடி
எடுத்து வைக்க
தயங்குகின்றன..?

சந்தோஷமில்லை..
மனதில்..
என்ன செய்தாலும் ..
அது என்னிடத்தில்
வருவதே இல்லை!

..அதனால்தானோ..?

இங்கிருந்துதானே
இறைத்துக் கொண்டிருந்தேன் ..
அதை..
இது வரை..!
எப்பொழுது
எண்ணத் துவங்கினேன்..
அது வெளியில் இருந்து
வருகின்றதென ..?

என்ன..இது..
என் விரல்கள்
விறுவிறுப்பாய் இயங்குகின்றன..

கண்கள்..
சுற்றியுள்ள அனைத்து
நுட்பங்களையும் பதிவு செய்கின்றன..

கால்கள் ..
மலையை
சாதாரணமாய் கடக்கின்றன..

மனம் கூட..
சந்தோஷத்தில்
குதிப்பதை நிறுத்தவேயில்லையே ..!

என்ன ஆச்சு ..
நம்ம ஊருக்கு ..?
ஒரே
சந்தோஷ மயம்..!


..








.

எழுதியவர் : கருணா (28-Feb-15, 5:10 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 217

மேலே