ஒரு காதல் சிந்தனை
காதலைத் தொட்டால் கவிஞனாகலாம் என்றான் கிரேக்கச் சிந்தனையாளன்
பிளேட்டோ . காதலைத் தொடாதவன் கவிஞன் இல்லை என்கிறேன் நான்.
காதலைத் தொட்டு காதலி கரம் பிடித்தால் வாழ்க்கை கவிதையாக மலருமா
என்று கேட்கிறான் இளைஞன் .
காதல் கவிதையில் கற்பனை
காதல் வாழ்க்கையின் எதார்த்தம்
எதார்த்தம் அனுபவம் நடக்கும் பாதை
அந்த அனுபவங்கள்
கவிதை ஆகலாம் கதை ஆகலாம்
உன் சுய சரிதை ஆகலாம்
ஆனந்த வரிகளில் இசை பாடலாம்
அதுவே கண்ணீரின் வீதி ஆகலாம்
ஒருதலை மோகம் ஆகலாம்
உன் தனிமைச் சோகம் ஆகலாம்
காதலின் யதார்த்தத் வீதியை
யார் அறிவார் ?
சாகும் காதலர்களை காவிய நாயகர்களாக்கி
ஷேக்ஸ்பியர் முதல் இன்றையக் கவிஞன் வரை
சாகா வரம் பெற்று வாழும் கவிஞர்கள் பலர்
அப்பாடியானால்
காதல் கற்பனைக் கவிதையா
வாழ்க்கையின் நிஜமா உண்மையா ?
என்று கேட்கிறான் இளைஞன்
------கவின் சாரலன்

