யாரும் கவிதை எழுத முயற்சிக்க வேண்டாம்

எண்ணங்களை
எழுச்சி பெறச் செய்து
ஏடுகளில் பதியும் வேலை
எளிதானதல்ல (யாரும்…)

எதார்த்தத்தை எறிந்து விட்டு
கற்பனையில் மூழ்கி
கவிதைக் கடலில்
முத்து எடுப்பது
கைவரக்கூடிய கலையல்ல (யாரும்…)

சமூக அவலங்களை
புறக்கணித்து விட்டு
சந்தம் தொடுப்பது
நல்லதல்ல (யாரும்…)

கவிஞர்கள் எண்ணிக்கை
கூடிவிட்ட காரணத்தால்
தயவுசெய்து... (யாரும்…)

இருக்கும் கவிதைகளை
படிக்கவே-இன்றைய
தலைமுறையினருக்கு
நேரமின்மை காரணத்தால்... (யாரும்…)

முகநூலில் பதிவிடப்பட்ட
கவிதைகளை விட
மொக்கை ஜோக்குகளே
மிகுதியான லைக்குகளைப்
பெறுவதால்... (யாரும்…)



கவிதையெழுதிய பக்கங்களை
கரையானுக்கு இட்டுவிட்ட
கவிஞர்களின் வாழ்வியல்
உண்மையிலிருந்து...
கருத்துரைக்கிறேன் (யாரும்…)

அர்த்த இராத்திரியில்
அனைவரும் உறங்கிவிட்ட பின்
குறுக்கும் நெடுக்குமாக
அலைய வேண்டிய நிலை
வருமாதலால் (யாரும்…)

கவிதையின் கருத்தை
கேலிக்குள்ளாக்குகின்ற
உலகில்...

என்ன எழுதி என்ன பயன் ?
ஒற்றைக் கேள்வியில்
உங்கள் கவிஞனின் வாழ்க்கை
முடிந்துவிடக்கூடிய நிலையில்...

யாரும் கவிதை எழுத
முயற்சிக்கவே வேண்டாம்!

எழுதியவர் : Kural Prabhakaran (1-Mar-15, 5:16 pm)
பார்வை : 279

மேலே