இப்படி நடந்துட்டே

90 வயதான ஒருவர் வாங்கிய
லொட்டரி சீட்டுக்கு 60 கோடி
பரிசு கிடைத்தது.அவரது குடுப்பத்தினர்
இந்த விசயத்தை அவரிடம் எப்படி
சொல்வது? திடீர்னு........சொன்னா
ஒருவேளை அதிக சந்தோசத்துல ஹார்ட்
அட்டாக் வந்திட்டா என்ன செய்யுறது என்று
யோசனை செய்து பார்த்துவிட்டு ஒரு
வைத்தியரிடம் அவரை அழைத்துப் போனார்கள்.

விசயத்தை கேட்ட வைத்தியர் ஓ...........அவ்வளவுதானே.
நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்.
அவரிடம் பக்குவமா பேசி நான் விசயத்தை
சொல்லுறேன் என்றார்.ஊர்க்கதை எல்லாம்
பேசி இறுதியாக ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.
உங்களுக்கு லொட்டரியில 60 கோடி விழுந்தா
என்ன பண்ணுவீங்க...என்றார்.

அதுக்கு அந்த வயசானவர் என்ன டாக்டர்
சார் இப்புடி கேட்குறீங்க.நீங்க ஒஸ்பிட்டல்
கட்டுறீங்க இல்லையா.... உங்களுக்கு
ஒரு 60 லட்சத்தை தூக்கி கொடுப்பேன் என்றார்.
படார் என ஒரு சத்தம்!இதை கேட்ட டாக்டர்
மயக்கம் போட்டு விழுந்திட்டார்.அதுக்கப்புறம்
அவர் எழுந்திருக்கவே இல்ல.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (1-Mar-15, 5:44 pm)
பார்வை : 196

மேலே