கொடுவிலங்குகளின் தவ இரவுகள்
ஆரோகணங்களுக்கு முன்னதான
நிமிடங்களில்
வழக்கத்திற்கு மாறாய்
நான் புதியதாய் இருப்பதுவாகச்
சொல்லியிருந்தான்....
என் நிர்வாணங்கள் பழகியிருந்த
அவனுக்கு நான்
உடுத்தியிருப்பது புதியதாகவே
தெரிந்திருக்கக் கூடும்..
நான் நினைத்ததைச் சரியென்று
உறுதிப்படுத்தி நீ பழையதாகவே
இரு என.... பின்கழுத்தில்
தொடங்கி விட்டிருந்தான்...
அவனோடு பிசுக்கும்
கலவி யாத்திரைகளை நான்
நிரம்ப ரசிப்பதுண்டு... நவீனத்துவங்களில்
அவன்.. இயந்திரமாகவும்.. நான்..
எழுத்தோலையாகவும் போல...
குழந்தையின் மூர்க்கமும்
கொடுவிலங்கொன்றின் கொஞ்சலைப்
போலவும் இருக்கும்.. அவனுடையதான
என் ஆரோகணப் பொழுதுகள்...
நிலைகள்... தவங்கள் என
ஒரு ..விலங்காகவே
முனகிக் கொண்டு இயங்கியிருப்பான் ....
முடிவாய்....இந்திரியம் பீய்ச்சிக் கழித்து.
மூச்சிரைத்துக் கொண்டே..
மனிதனாகி
பேசத் தொடங்கியிருந்தான் அவன்....
"வேசி என்றால் உன்னைப்
போல........."
அவன்....தொடங்குகையில்
சொன்னதைப் போலவே...
என்னுள் புதியதாய்
எதுவோ உடைந்து
எரியத் தொடங்கியிருந்தது.......
"
.

