தமிழ் தரும் இனிமை
இசைத்திட தமிழ்
இணைந்தது ராகம்
ராகம் கனிந்திட
நடனமே வந்தது
நாட்டியம் குலுங்கிய
கைகளில் வீணையும்
சுரங்களும் இணைந்தன
தாளங்கள் மேளங்கள்
தரம் மாறா இசைக்க
மெல்லிசை மன்னர்கள்
சேர்த்திட்ட குரல் வளம்
செம்மையாய் இன்னிசை
கச்சேரி தளம் கண்டு மகிழ
அவை தன்னில்
கொடுத்தது தமிழ் செழுமை
கொப்பளித்தது தமிழின் இனிமை
செருக்குடன் தமிழனும்
சீருடன் பரிசுடன் சிறந்த
நல்லோர் வாழ்த்துடன்
சிரம் தாழ்ந்து தரம் உயர்ந்து
ஒழுக்கமும் பண்பும் ஒருங்கே
அமைந்திட்ட தமிழாலே
தான் உயர்ந்து நிற்பான் தமிழன்
என்றும் நம் துணை நிற்கும்
எம் அன்புத் தமிழ் அழகுத் தமிழ்
நம்மை என்றும் எங்கும் மிளிர வைக்கும்
பண்புத் தமிழ் பாசத் தமிழ்
அவை அடக்கம் தெரிந்த தமிழ்