பழகிய வலிகள் -கார்த்திகா

நான் சொல்வதைக் கேள்
மழலையில் அம்மா..
பேச்சில் கொஞ்சம்
கவனம் சேர்க்கலாம்
பதினாறுகளின் தொடக்கத்தில்
தந்தையின் அன்பு
எப்போதுதான் என்
பேச்சை கேட்பாய்
காதலனின் கரி(சன)
வார்த்தைகள்
'நாங்க சொல்றோம்ல"
நட்பு வட்டாரம் ..
நொடிகள் பறிக்கப்பட்ட
வெறுமையின் கொந்தளிப்பில்
சொற்களும் வலி பழகிடுமோ?