மனிதம்

மனிதம்..

இன்றைய நடைமுறையில் இல்லாத ஒன்று... எதிர்பார்க்க கூடாத ஒன்று..

உண்மை, நேர்மை,
உழைப்பு ,அன்பு ,
இரக்கம், உதவி , அக்கறை
இவையெல்லாம் மனிதத்தின் வடிவமாம்...

ஆனால் இன்றோ...

உண்மை பேசுபவன் பைத்தியக்காரன்,
நேர்மையாய் இருப்பவன் பிழைக்கத்தெரியாதவன்..

உழைப்பவன் அடிமை..
.
அன்பு பாசமெல்லாம் அடமானம் சென்றுவிட்டது...
இரக்கமெல்லாம் இறவலுக்கு கூட கிடைப்பதில்லை...

சாலையின் நடுவே அடி பட்டிருக்கும் ஒருவனைப் பார்த்து, ஓரமாக ஒதுங்கி செல்லும் வண்டிதான் இன்று நம் மனிதம்...

பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் சில செய்திகள் பார்த்து உச்சு கொட்டுவதுதான் நமது மனிதம்...

நம்மவர் அடிபடும் நிலைப் பார்த்தும் ,அழிந்துபோகும் நிலைப்பார்த்தும்,
அடுத்த ச்சேனல் மாற்றி பாடல் ரசிக்கும் மனமே இங்கு பெரும்பாலும் நம் மனிதம்...

சாதம் வைத்த சிறுவனின் நிலைப்பற்றி அறியாமல்தான், சாப்பிட்டுத்திரும்புகிறது மனிதம் பல உணவகத்திலிருந்து...

வெடித்து சிதறும் பட்டாசுகளில் பலரின் வேதனைத் தெரியாமல்தான், ரசித்துக்கொண்டிருக்கிது மனிதம் பல கொண்டாட்டங்களில் இருந்து....

சுற்றி இருப்போரையெல்லாம் நம்மவர் என்று எண்ணாத, அவர்களின் நிலை மாற்ற எழாத, மனிதனின் மனம் மாறாமல் மனிதம் பிறவாது
என்றும்....

எழுதியவர் : சுகன் dhanadhana (1-Mar-15, 11:11 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : manitham
பார்வை : 105

மேலே