மெழுகாய் உருகும் என் உள்ளம் 555

என்னுயிரே...

தண்ணீரில் தத்தளித்தாலும்
இரவு நேரத்தில் உலாவரும்...

வெண்ணிலவை காண காத்திருக்கும்
அல்லியைபோலவும்...

தொட்டுவிடா தூரம் இருந்தும்
கதிரவை காண காத்திருக்கும்...

தாமரையை போலவும்
காத்திருக்கிறேன்...

உன் வருகைக்காக நான்...

உனக்கும் எனக்கும் இருக்கும்
இடைவெளிகள் தூரம் என்றாலும்...

மனதால் நான் உன்னை
நெருங்கிவிட்டேன்...

நீயும் என்னை
நெருங்கிவிடுவாய் என்று...

மெழுகை போல் என் உள்ளம்
உருகிக்கொண்டு இருந்தாலும்...

என் விழிகளின் வெளிச்சத்தில்
நீ இருளை கடக்கலாம்...

உன் விழிகளுக்கு இமைகள்
துணையாக இருப்பது போல்...

உன் வாழ்வில் நான் என்றும்
உனக்கு துணையாக இருப்பேனடி...

நீ மட்டும் என் வாழ்வில்
வந்தால்...

இரவு நேர அல்லியும்
பகலில் மலரும்...

பகல் நேர தாமரையும்
இரவிலும் மலரும்...

உருகி கொண்டு
இருகிறேனடி...

நான் உனக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Mar-15, 4:28 pm)
பார்வை : 501

மேலே