பிள்ளை கற்றுத் தந்த ஞானம்

என் தந்தை நிலை குலைந்து
தலை குனிந்து கண்ணீர்விட்டார்
காரணம் நான் கேட்ட கேள்வி
எனக்காக என்ன சொத்து
சேர்த்து வைத்துள்ளீர்கள்
அவர் பட்ட மன வேதனையை
என் பிள்ளை என்னிடம்
இதே கேள்வியை கேட்ட போது
என்னால் உணரமுடிந்தது
பள்ளி தந்த ஞானத்தைவிட
பிள்ளை கற்றுத்தந்த ஞானம்
எக்கல்வி கற்பினும் கிட்டாது!

எழுதியவர் : மோகனதாசன் (4-Mar-15, 10:41 am)
பார்வை : 139

மேலே