தேர்வென்னும் மாயப் பேய்

நாளை அரசுத்தேர்வு
இரண்டாண்டு கூத்தின்
அரங்கேற்றம்....!
தாயத்துகளோடும்
விபூதி பட்டையோடும்
சகுனம் பார்த்துசமயம் பார்த்து
விண்வெளிக்கு ராக்கெட் செலுத்தும்
விஞ்ஞானிகள் போல்
ஏவி விட்டு காத்திருக்கும்
பெற்றோர்களின் கண்களிலும்
தெரியாமல் இல்லை தேர்வு பயம்....!
மகன்/மகள் தேர்வெழுத
புண்ணாகிக் கொண்டிருக்கிறது
பெற்றோரின் விரல் நகம்...
மருத்துவமும், பொறியியலும்
மட்டுமே படிப்பு என்ற
சமூகத்தின் கோணல் புத்தி மாற வேண்டும்....
பிள்ளைகள் தோள் மேல்
புத்தக மூட்டை மட்டுமல்ல
பெற்றோரின் கனவு மூட்டையும்
சேர்த்தே சுமத்தப்படுகிறது....
ஈராண்டு வனவாசம் முடியும்
மகிழ்ச்சியை விட
எதிர்காலம் குறித்து சமூகம்
ஏற்படுத்தும் மாயை
அது சொல்லிமாளாத காதை...!
மாணவனா/மதிப்பெண் எந்திரமா?
காண்போரெல்லாம் அறிவுறை கூறி
ஆளுக்காள் ஆலோசனை கூறி
தேர்வு எழுதுதல்
சரித்திர சாதனை என்பது போல்
மிகை படுத்தி....
தேர்வு தான் வாழ்க்கை என்று
பயமுறுத்தி....
அய்யகோ....ச்ச்சீ......
இந்த அவலம் மாற வேண்டும்
சமூகம் திருந்த வேண்டும்....
கற்றதை, பெற்றதை
எழுதி....
உணர்ந்து படித்ததற்கு
உரிய மதிப்பெண் பெற்று
விரும்பிய படிப்பை படித்து
அதற்கேற்ற பணியில் அமர்ந்து
ஆனந்தப் படட்டுமே....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (4-Mar-15, 9:41 pm)
பார்வை : 901

மேலே