தாய்மை ---- நேரிசை ஆசிரியப்பா

கருவை சுமந்து கண்இமைபோல் காத்து
உயிர்வலி தாங்கி உயிரைப் பெற்றெடுத்து
பசிதூக்கம் மறந்து பலகலை புகட்டி
பாசத்தைத் தந்து பண்பினை ஊட்டி
ஆடைகள் அணிவித்து ஆனந்தம் அடைந்து
தாய்ப்பாலை புகட்டி தாய்மையை உணர்த்தி
அழுதிடும் குழந்தைக்கு ஆறுதல் சொல்லி
நற்கதைகள் போதித்து நல்அமுது தந்து
சீருடை உடுத்தி சீராட்டிப் பாராட்டி
பள்ளிக்கு வழிஅனுப்பி பரிவுடன் காத்திருந்து
விடலை பருவத்திலும் விலகாது தோழியாய்
கல்லூரி காலத்தில் கண்ணியமாய் நடத்தி
பணிபுரியும் நாட்களில் பணிவிடைகள் தாம்செய்து
ஆண்டவனை துதித்து அருள்தனை வேண்டி
பிள்ளையின் நலனே பெரிதென
எண்ணும் ' தாய்மை ' என்றும் வாழியவே ..!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Mar-15, 10:14 pm)
பார்வை : 127

மேலே