வெளிநாட்டுக்காரன்

நொந்து தவிக்கும்  எம் உறவுகள் அங்கே 
அந்நிய தேசத்தில்  அரவணைப்பின்றி 
அலையுடன் பேச்சில்  தவிக்கின்றோம் இங்கே 
வியர்வைதனை ஊற்றி 
விதைகளில் கலந்து 
விதைத்தால் விவசாயம் 
வியர்வை கொட்டி  வேதனைகலந்து
விதைத்தால்  மிஞ்சுவது வேதனை மட்டும் 

வாங்கிய கடனுக்கு வட்டி 
வட்டிக்கு குட்டி போடும்  காலம் மனதினிலே
  சம்பளம் எடுத்தால்  பை நிறைய சில்லறை காசு 
ஓரிரு நாள் கடந்த பின் 
வேறு ஒருவரின் காசு 
வெளிநாட்டுக்காரரென்று  வீட்டுத்திட்டம் பறிப்பு 
இன் நாட்டில் நமக்கு ஏது மதிப்பு
  அள்ளிக்கோதும்  தலை முடி
  உதிர்ந்து போன  சொட்டைத்தலை மட்டும் 
சேர்த்து வைத்த பணத்துடன்  பாசங்களை நாடி 
கடதாசி கூட
(ஒரு அழைப்புக்கூட ) போடவில்லையென்று 
உறவுகள் முகத்தை  மறுபக்கம் திருப்பி 
விழி கண்ணீர் சொட்ட 
உதடு மட்டும்  புன்னகை வடிக்கும் 
விமான நிலையத்தில் 
வெளிநாடு என  கலகலக்கும் 
விமானப்பயணம்  முடிந்திறங்க 
வேதனைக் காற்றொன்று  நமக்காக வீசும் 

வழியனுப்பி வைத்த 
உறவுகள்  பாசம் பிசைந்து 
வகைவகையான  தின்பண்டங்கள் 
சுவைக்க மனம் வாராது 
அந்நிய தேசத்தில் 
அவலப்படும் அகதியைப்போல
  கண்களை கசக்கிய படி 
காலத்தை கடத்தி 
தாயகம் திரும்புகின்றோம்
சொந்தங்களைத் தேடி ........

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (4-Mar-15, 11:41 pm)
பார்வை : 225

மேலே