தாய் செய்ததை மறந்து விட்டீரா-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

ஒரு தாய் என்னவெல்லாம்
செய்தாள் என்பதை மானுடன்
கடைசி வரை உணர்வதில்லை
அவன் உணரும் போது ஆத்தா
உயிரோடு இருப்பதில்லை
கருவறையில் தங்க இடம் கொடுத்த
தன் தாயிற்கு வசிப்பறையில் தங்க
இடம் தராத மூடர்களினால்
உருவானது முதியோர் இல்லம்
உலகம் ஒரு பாவ நதி அதிலும்
அன்பு என்ற சொல் உயிர் வாழ்வது
கரு தந்த நம் தாயினால் ஆகும்.
அம்மா என்றவள் தமக்கு செய்த பணிவிடை
மறந்து இன்று எத்தனை பேர் அவளை
சனியன் என்று தூற்றுகின்றனர் எட்டு தடவை
அசிங்கம் பண்ணியதற்கு கோபிக்கிறோம் என்றால்
அவள் சேலையில் என்பது தடவை நாம்
பண்ண அசிங்கத்தை பாசத்தோடு பார்த்தவளை
என்ன சொல்வது,எம்மை படைத்த கடவுளா?
கண் கண்ட தெய்வமா?