விழி பூக்கள்
ஊமையாய் நின்ற உதடுகள்
பேசாத வார்த்தைகளை
நம்மிருவரின் நளின விரல்கள்
பேசாத ஸ்பரிசங்களை
எனக்குள் தவிக்கும் உணர்வுகள்
சொல்ல முடியாத நேசத்தை
உனக்காகவே துடிக்கும் இதயம்
செய்ய இயலாத பரிமாற்றத்தை
எனக்குள் ஒளித்தே வைத்திருக்கும்
உன் மேலான ஆசையை
நான் வளர்ந்த மதத்திற்காகவும்
என்னை வளர்த்த மனிதர்களுக்காகவும்
பூட்டியே வைத்திருக்கும்
என் மனசையும்
என்னை நேசிக்கும் பெற்றோர்களுக்காகவும்
நான் நேசிக்கும் பண்பாட்டிற்க்காகவும்
மறைத்தே வைத்த
என் நேசத்தையும்
காதல் வேண்டாமென
எவ்வளவு சொல்லியும்
கேட்டு கொள்ளாமல்
பிடிவாதமாய் உன்
பெயரை மட்டும்
உச்சரித்து கொண்டிருக்கும்
என் இதயத்தையும்
எனக்குள் ஒன்றுமில்லை
என்று பலமுறை சொல்லியும்
மறுக்கவும் மறக்கவும்
முடியாத உன் மேலான
என் காதலையும்
மொத்தத்தையும் மவுனமாய்
உன்னிடம் சேர்த்து விட்டு
கொஞ்சம் வலியோடு செல்கிறது
என் விழிகள்
இதயங்களுக்கு தானே
இரும்பு வேலிகள்
இமைகளுக்கு இங்கு
தடைகள் ஏது
பட்டாம்பூச்சி போல உன்னை
எப்போதும் பார்த்து கொண்டு
சுதந்திரமாய் தன் காதலை
எப்போதும் சொல்லி கொண்டு
இந்த இரு பூக்களும்!
- விழிகள்

