வரலாற்று யாத்திரை - 17

பாவம்.!!..............
அவன் தாய்க்கு , அவனுக்கு முன்னம் பிறந்த இரண்டு குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்து போயின . அவன் தந்தைக்கு இன்னொரு மனைவியும் இருப்பது அவனுக்கு குழந்தை பருவத்திலேயே தெரிய வருகிறது . ஏதோ காரணங்களை சொல்லி அப்பா எப்போதும் அம்மாவை அடித்துக் கொண்டே இருப்பதும் , அம்மா துன்புற்றே இருப்பதும் அவனுக்கு இளமையில் வாடிக்கையான விஷயாமாகி விடுகிறது .

பதிமூன்று வயதில் தந்தை இறந்து விட அவன் தாய்தான் அவனை ஆளாக்குகிறாள்.
தந்தை இருந்த போதே அப்படித்தானே.!
அவனுக்கு பள்ளி படிப்பு ஏறவில்லை எனினும் நன்றாக வரைவான் . ஒரு சிறந்த ஓவியனாக வர வேண்டும் என்பதுதான் அவன் சிறுவயது லட்சியமும் கூட .

தன் பத்தொன்பது வயதில் தாயையும் இழக்கிறான் .புற்றுநோயில் அவள் சென்று சேர அனாதை நிலைக்கு தள்ளப் பட்ட்டான்.தன் ஓவியங்களை சுற்றுலா பயணிகளிடம்
விற்று வயிற்றை கழுவிக் கொண்டான்.நடை பாதைகளில்தான் படுத்து உறங்கி கொள்கிறான் .

வாழ்வதே போராட்டமாகி...கடைசியில் நல்ல வேலை ஏதும் கிடைக்காமல் அண்டை நாட்டு ராணுவத்தில் சேர்கிறான் .இருப்பினும் அடைக்கலம் தந்த நாட்டுக்காக ராணுவத்தில் வீரத்தோடு பணியாற்றுகிறான் . வீரப்பதக்கம் கூட பெறுகிறான் . போரில் ஏற்பட்ட தன் கண் பார்வை இழப்புக்காக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த விருது அவனை வந்து சேர்கிறது .

இப்படி தன் வீரத்தாலும் , கடமையாலும் , தனக்கு இருந்த பேச்சாற்றலாலும் , நாட்டுப் பற்றினாலும் , உள்ளே ஊறிப்போன தலைமை பண்பினாலும் ஒருநாள் அந்த நாட்டிற்க்கே அவன் தலைவன் ஆகிறான் .

நாட்டின் முதல் குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என்று தன்னையே உதாரணமாக்குகிறான்.
பெண் சபலம் , மது , புகை , சூதாட்டம் ஏதும் இல்லாத தலைவனாக இருப்பதே தொண்டர்களையும் அப்படி இருக்க செய்யும் என உறுதியாக நம்பி கடைசி வரை அப்படியே வாழ்ந்தான் .
சாவதற்கு ஒரு நாள் முன்தான் தன் நீண்ட நாள் காதலியையே மணம் செய்து கொண்டான்..

பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டத்தை முழுவதுமாக ஒழித்தான் .நீர் , காற்று மாசு படக் கூடாது என கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தான் .
ஆபாசத்தை எந்த ரூபத்திலும் எதிர்த்தான் .....
' அழுகிய சமூகத்தை சுத்தமாக்க வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள் மட்டுமல்ல ...விளம்பர சுவரொட்டிகள், கடைகளின் ஷோகேஸில் கூட ஆபாசத்தை நான் அனுமதிக்க மாட்டேன்!”" என எச்சரித்தான்.

எல்லோருக்கும் இலவச மருத்தவம் , முதியவர் அனவைருக்கும் ஓய்வூதியம் , மருத்துவத் துறையில் முன்னேற்றம் , தொழில் துறையில் உலகுக்கே சவால் என தான் நினைத்த அத்துணை ஆசைகளையும் , கொள்கைகளையும் நடைமுறைபடுத்தி ...

"ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும்தான் . அப்போதுதான் நான் இந்நாட்டை சேர்ந்தவன் என்று ஒவ்வொரு குடிமகனும் பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமை உருவாகும். " என்கிறான் .

இப்படி இலட்சியங்களோடு மட்டுமலாமல் .... அவற்றை செயல் வடிவாக்கி சாதனைகளோடு... வாழ்ந்த அவன் உலகத்தின் மிக சிறந்த தலைவன் என புகழ் பெற்று வாழ்ந்திருப்பான் .. உலகமே அவனை கொண்டாடி இருக்கும் லிங்கன் , காந்தி , மாசே துங் , நெல்சன் மண்டேலா , வரிசையில் .

1945 ஏப்ரல் 30 அன்று தற்கொலை செய்து கொண்ட அவன் 1939 ல் இரண்டாம் உலக போர் துவங்குவதற்கு முன்னம் ....ஏதோ ஒரு வகையில் இறந்திருந்தால் ...
அவன் நிச்சயம் மேற்கூறிய வரிசையில் முதலிடத்தில் கூட இருந்திருக்கலாம் .

முதலில் அந்த உலக போரே நடந்திருக்காது . அவனால் ஐந்து கோடி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள் .

கடைசி காலங்களில்.....எல்லா மக்களுக்கும் , எல்லா நாடுகளுக்கும் ஏதோ ஒரு பயத்தை , துவேஷத்தை மட்டுமல்ல .! தன்னையே ஒரு பொது எதிரியாய் உருவாக்கி விட்டு செத்து போன அவன் ....

அடால்ஃப் ஹிட்லர் .

... வாய்ப்பளித்த தோழர் கவிஜிக்கு நன்றி .

எழுதியவர் : ராம் வசந்த் (6-Mar-15, 12:24 pm)
பார்வை : 162

மேலே