விதவை பெண்

மங்கையவள் மணமேடை ஏறி வர
மணாளன் கை பிடிக்க
மங்கள ஓசை முழங்க
மனதார வாழ்த்திட
மகிழ்வோடு நடந்தது
திருமணம்

மண்டபத்தை காலி செய்து
மணாளன் வீடுசெல்ல
புறப்பட்டது வாகனம்
மங்கையவள் மனசுக்குள்
மத்தாப்பு மறு கணம்
நடந்தேறியது விபத்து
மணாளன் மாண்டுவிட்டான்
மங்கையவள் விதவை கோலம்

மன இருள் தனை
சூழ்ந்துகொள்ள
மணாளன் வீட்டினிலே
மங்கை யவள் விதவை
என்னும் கோலத்துடன்
ராசி இல்லாதவள்
என்ற பட்டதுடன்
முடங்கி கிடக்கிறாள்

துயிலா இரவோடு
விடியாத வாழ்க்கை
என்ற கனத்த இதயத்தோடு
வாழ்கிறாள் ..

எழுதியவர் : கவியாருமுகம் (7-Mar-15, 1:21 pm)
Tanglish : vithavai pen
பார்வை : 642

மேலே