கலைமடந்தை- மீள் பதிவு -ப்ரியாராம்

அனல்தனை குளிர்விக்கும் புனல்
ஆம்பல்தனை மலர்விக்கும் தென்றல்
ஆதவனின் அருள்பெறும் கலைமகள்
அலையாய் கரைதொடும் வலைமலர்
வண்ணமலராய் தேன்பருகும் மதுகரம்
வாசமலராய் தேன்சொரியும் மகரந்தம்
நீர்த்திவலையாய் பொழிந்திடும் கார்மேகம்
நீராவியாய் எத்தணிக்கும் வெண்மேகம்
வர்ணனை வார்த்தையின் வசிப்பிடம்
வாசங்கள் வீசிடும் மலர்க்கூடம்
சேற்றில் முளைத்திட்ட செந்தாமரை -நித்தம்
நாற்றாய் துளிர்விடும் நற்றாமரை
இல்லத்தில் எறிந்திடும் தீபம்
இன்னல்களை தாங்கும் புவனம்
நான்மறை ஓதிடும் நன்மறை
மும்மதம் போற்றும் முந்நூல்
சலதியில் சங்கமிக்கும் வரை
சலிக்கமால் ஓடிடும் சிந்துநதி
பிரம்மன் படைப்பின் உச்சம் -பெண்கள்
வரலாற்று வாழ்வின் எச்சம்
====================================
எச்சமென்பதை உச்சமாக்கி
உச்சமென்பதை ஒற்றுமையாக்கி
ஒற்றுமையென்பதை பலமாக்கி
பலமென்பதை வெற்றிக் கலமாக்கி ,
முறத்தினாலே புலியை விரட்டியடித்த
புறநானூற்றுச் சரித்திர பெண்மணியாய்
மீண்டும் நாம் வெற்றி வாகைச் சூடிடுவோம் ....
@@@@=========@@@@@====@@@@@@@
எழுத்துத்தள தோழியர் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் ..
என் இதயம் ஆட்கொண்ட இனிய அன்னை சியாமளா ராஜசேகர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .வணங்குகிறேன் .
அன்பு அக்கா சொ .சாந்தி அவகளுக்கு தனி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா ..
திருமதி அமுதா அம்மு அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .
அன்புத் தோழி ஆசிரியை சித்ரா ராஜ் அவர்களுக்கும்
என் செல்ல குட்டி பிரியா ஐஸ்சு அவர்களுக்கும்
பிரியமான வாழ்த்துக்கள் ...
நல்ல மனம் கொண்ட யார் மனதும் நோகும்படியும் நடந்திடாத இல்லத்தரசி ..கவிதா .புனிதா வேளாங்கண்ணி அவர்களுக்கும்
இந்திரகோவிந்தன் அவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
இங்கு யாழ்மொழியின் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன் ..