என்னவளே -தொடர்கதை
பகுதி-18
கமலா தன் அக்காவிடமும் மாமாவிடமும் மகிழ்ச்சியாக ராமைய்யா பிள்ளை சுந்தரத்திற்கு பாஸாக இருந்ததையும் அவர் சுந்தரத்தின் பிராஞ்சுக்கு செக்கிங் விஷயமாக ஒன்றிரண்டு முறை தம் ஊருக்கு குடும்பத்துடன் வந்து தமது இல்லத்தில் தங்கி இருந்ததை நினைவு கூர்ந்தாள்.
ராஜலக்ஷ்மி அம்மாள் அப்பொழுது என் பெண்ணை பார்க்கும் பொழுது எல்லாம் எனக்கு ஒரு பையன் இருந்தால் கண்டிப்பாய் கல்பனா தான் என் மருமகள் என்று மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்வாள் இந்த கமலா என்றவாறு அன்பாய் கமலாவின் கையை பற்றினால் ராஜலக்ஷ்மி அம்மாள் .
சுந்தரம் ராமைய்யா பிள்ளை ராஜலிங்கம் மூவரும் குடும்பதை பற்றியும் அலுவலக விசயங்களையும் நாட்டு நடப்பையும் விவாதித்து கொண்டிருந்தனர் .
ராஜலக்ஷ்மி அம்மாள் ராதா கமலா மூவரும் சியாம் பற்றியும் அவனது பணி கல்பனா மீதுள்ள தீரா காதல் பற்றியும் பேசி சிரிதுக்கொண்டிருன்தனர் ..
பகுதி -19
சியாமல் பணியில்முழுமனதுடன் ஈடுபட முடியவில்லை இந்நேரம் போய் பேசி இருப்பார்கள் ..கல்பனாவின் பெற்றோர்கள் என்ன சொல்லி இருப்பார்களோ தெரியவில்லை ..போன் செய்து கேட்கலாம் என்றால் பெரியவர்கள் பேசி கொண்டிருக்கும்போது நாம் போன் செய்வது அநாகரீகமாக இருக்கும் என்று எண்ணியவனாய் குழப்பத்தில் தவித்திருந்தான் .
சியாம் ஒரு முடிவுடன் மீண்டும் கல்பனாவை பார்த்து அவளின் மனநிலையை அறிந்து கொள்ள கல்பனா அலுவலகம் நோக்கி சென்றான் .
கல்பனா இதற்கு மேல் தன் மனதை பூட்டி வைப்பது முட்டாள் தனம் சியாமை அவனது அலுவலகத்தில் பார்த்து தன் காதலை தெரியப்படுத்தி தம் பெற்றோறுடன் பேச செய்யலாம் என்று எண்ணி சியாமின் அலுவலகம் நோக்கி நடந்தாள்.
கொட்டும் மழை சியாம் கல்பனாவிற்காக பூங்கொத்துடன் வந்து கொண்டிருந்தான் .கல்பனாவை பார்த்தவுடன் நடுத்தெருவில் அவளிடம் மண்டியிட்டு I love you என்றான் .கல்பனா சிறிதும் தாமதிக்காமல் I love you too என்றாள்.
பகுதி -20
சியாமின் செல்போன் ஒலித்தது சியாமின் சித்தி கமலாதான் பேசினாள்.சியாம் உனக்காக நாங்கள் எவ்வளவோ எடுத்து கூறினோம் கல்பனாவின் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லையப்பா நீ இங்கு வரவேண்டாம் நாங்கள் வீட்டிற்கு கிளம்புகிறோம் என்றாள் ராஜலக்ஷ்மி அம்மாளையும் அக்கா ராதாவையும் பார்த்து கண் சிமிட்டியவாறே..
சியாம் ஒரு நிமிடம் பதறி சித்தி அங்கேயே இருங்கள் ஐந்து நிமிடத்தில் நான் அங்கு வருகிறேன் என்று போனை கட் செய்தான்.
சியாம் கல்பனாவிடம் ஏமாற்றத்துடன் தன் சித்தி கூறியதை சொன்னான்.கல்பனாவும் ஆமாம் அவர்கள் சக்ரவர்த்தியை பெரிதும் விரும்பினார்கள் இப்பொழுது என்ன செய்வது என்றாள் கண்ணீருடன்.
சியாம் சரி வா உன் வீட்டில் சென்று பேசி பார்க்கலாம் என்றவாறு கைக்கோர்த்தவாறு அவளுக்கு ஆதரவு கூறியவாறு கவலையுகவலையுடன் இருவரும் வீட்டை அடைந்தனர்.
சியாமிற்கும் கல்பனாவிற்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது வீட்டில் அவர்கள் கண்ட காட்சி ....எல்லோரது அன்புடனும் ஆசியுடனும் சியாம் கல்பனா திருமணம் இனிதே நடந்தேறியது ....
....... முற்றும் ........
சிவ.ஜெயஸ்ரீ