இன்றைய கல்வி -ரமனோஜ் குமார்

இன்றைய கால கட்டத்தில் இவ்வுலகில் கல்லாதவர்கள் என்று எவரும் இலர்.அனால் நம்முள் எதனை பேர் எதற்கு படிக்கிறோம் என்று தெரிந்தா நாம் படிக்கின்றோம்?இல்லை!

நாம் நம் ஆரம்ப கல்வியில் ஒன்று கூட்டல் ஒன்று இரண்டு என அனைவரும் படித்திருப்போம்.அனால் அது எவ்வாறு வருகிறது என்று நாம் சிந்தித்தது உண்டா? நம்முள் பலர் நாம் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாது இருக்கும்.அனால் ஏதோ ஒரு சூழலால் அவ்வேலையை நாம் செய்ய நேரிடும்.

நான் தனியார் பள்ளிகளில் என் ஆரம்ப கல்வியினை பெற்றேன்.நான் சுமாரான மாணவன் என்ற பிரிவில் என் ஆசிரியர்களால் சேர்க்கப்பட்டேன்.நம் இன்றைய கல்வியில் தேர்வில் மதிப்பெண் எடுப்பவர்கள் உயர் பிரிவினை சேர்ந்தவர்கள்.இரவு முழுவதும் தூங்காமல் என்ன படிக்கின்றோம் என்று தெரியாமல் முழுவதையும் ஒரு மாடு தன் உணவினை உண்பது போல் முழுமையாய் விழுங்கி அதை மீண்டும் மீண்டும் அசை போட்டு தேர்வில் அப்படியே கக்குபவர்கள் அவர்கள்.

அனால் என்னை போன்றவர்கள் குடும்ப கஷ்டத்தினை உணர்ந்து பெற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்களது ஆசியினை பெற்று பள்ளியில் நடத்தும் தினசரி பாடங்களில் மட்டும் என் கவனத்தை செலுத்தி அதை என் சொந்த வார்த்தைகளை பயன்படுத்தி அதை தேர்வில் எழுதுபவர்கள்.

பள்ளி அரையாண்டு தேர்வுகள் முடிந்தன.. வழக்கம் போல் மதிப்பெண் குறைவாக வாங்கியிருந்தேன்,என் தந்தை அழைக்கப்பட்டார்.என் தன்கை அனைவர் முன் கைகட்டி நின்று அவமானம் படுவது எனக்கு கஷ்டமாய் இருந்தது..

நான் ஒரு கேள்வியினை எடுத்து கொண்டால் பல்வேறு கோணங்களில் அதனை சிந்தித்து பார்ப்பேன்.

ஒரு உதாரணமாய் ,ஒரு முறை என் அறிவியல் ஆசிரியர் ஈர்ப்பு விசை பற்றி பாடம் எடுத்து கொண்டிருந்தார்.எந்த பொருளும் பூமியின் மேல் நிலையாய் நிற்காது.அது உடனே பூமியை நோக்கி வந்து விடும் என்றார்.அப்பொழுது நான் அவரிடம் வானில் பறக்கும் விமானம் நிலையாய் பூமியை விட்டு பறக்கிறதே ஈர்ப்பு விசையினால் என் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கேட்டேன்.என் ஆசிரியர் அதற்கு பதில் கூறாமல் என்னை திட்ட தொடங்கினார்.நான் அழுது கொண்டே என் வீடு வந்து சேர்ந்தேன்.

என் தந்தை கூலி தொழிலாளி.அவர் தன் வறுமையிலும் என்னை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார்.நான் அழுதுகொண்டே வருவதை கண்ட அவர் "என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.

நான் நடந்தது எல்லாவற்றையும் என் தந்தையிடம் கூறினேன்.பின் அவரிடம்"அப்பா நாம் எதற்கு படிக்கின்றோம்?"என்று கேட்டேன்.அதற்கு என் அப்பா "நன்கு சம்பாதிப்பதற்கு?"என்றார்.நான் நன்கு சம்பாதிப்பதற்காக நீங்கள் உங்கள் சொத்து அனைத்தையும் அப்பள்ளியில் கொட்டுறீங்களே ! அது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டேன்.

என் அப்பா வேகமாய் ஓடி வந்து என்னை கட்டி தழுவினார்."நீ விருப்பபடி என்ன வேண்டும் என்றாலும் செய் !"என்றார்.

ஒரு மெல்லிசான கொடு கோட்டுக்கு இந்த பக்கம் போனா நான் என் விருப்பபடி வாழ முடியும் கோட்டுக்கு அந்த பக்கம் போனால் அதே பள்ளி ,ஆசிரியிர் ஏனோ தானோ என்ற வாழ்வு.............

முடிவு எடுக்கும் நேரம் என் வாழ்வில் வந்தது.வாழ்க்கை வேகமாக ஓடியது.பல ஆண்டுகள் கழிந்தன....................................................................................................................................................

நான் எதற்காக படிக்கிறேன் என்பதை உணர தொடங்கினேன்.என் வாழ்வில் நான் படிக்கும் ஒவ்வொன்றையும் நடைமுறையில் பயன்படுத்தி பார்த்தேன்.நான் யாருக்கும் அஞ்சவில்லை எதற்கும் அஞ்சவில்லை.நாம் படிப்பது எதற்காக என்றால் வாழ்வதற்கே அன்றி அடிமையை பிழைப்பதற்கு அல்ல என்று கூறியதும் என் முன் அமர்ந்த மாணவர்கள் கரகோசத்தினை எழுப்பினர்.


நம் நாட்டின் சிறந்த விஞ்ஞானி நீங்கள் உரையாற்றியதில் மிக்க மகிழ்ச்சி !என்று அப்பள்ளி தாளாளர் என்னை பார்த்து கூற நான் என் ஆசிரியரிடம்" நீ நல்லா வரமாட்டடா! "என்று திட்டு வாங்கியது நினைவிற்கு வந்தது.வான்நோக்கி என் தந்தையிடம் நன்றி கூறினேன்.என் முன் அமர்ந்திருந்த


நாளைய தூண்களை கண்டேன்.அவர்களிடம் நான் கூற விரும்பியது "கல்வி என்பது கற்பதற்கு மட்டுமே ,கரைத்து குடிப்பதற்கு அல்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

education must produce genius
not slaves!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

written by

R.MANOJKUMAR.

எழுதியவர் : ர மனோஜ் குமார் (7-Mar-15, 9:35 pm)
சேர்த்தது : ர.மனோஜ் குமார்
பார்வை : 860

மேலே