காத்திருப்பில் ஓர் வசந்தகாலம் - உதயா

காலத்தின் கோலத்தில்
காலம் வைத்தது சந்துப்புள்ளி
காதலி அவள் வைத்தது
என் துன்பத்துக்கு சாந்தப்புள்ளி

பூக்களின் சந்தையில்
மல்லிகையாய் அவள் ஒளிர
காட்டின் நடுவே நான்
காத்திருந்தேன் காதலனாய்

தென்றலில் பஞ்சாயித்து
ஊர் முழுவதும்
ஆளுக்கு ஆளுப் பேச்சு
அவள் தேவைதையாயென்று

தேகத்தின் நாடியினை
காதலெனும் கோலத்தால்
உணர்வெனும் மாவுதெனில்
என்னுள் போட்டு சென்றாள்

நான் அவளோடு
வாழ்ந்த காலங்கள்
குறிஞ்சி பூக்களின்
பிரசவ நேரங்கள்

எங்கிருந்தோ வந்தாள்
ஒருநாளில் வாசலில் போடும்
கோலமாய் சிலகாலமாய்
என்னுடன் வாழ்ந்தாள்

கை பிடித்து வந்தவள் வழியில்லா
நடுக்காட்டில் என்னை தவிக்க விட்டு சென்றாள்
காத்திருக்கிறேன் திரும்ப வருவாளென நினைத்தே
அவள் வரும் காலமே எனக்கு வசந்த காலம் .......

எழுதியவர் : udayakumar (7-Mar-15, 8:59 pm)
பார்வை : 291

மேலே