உசுர உருக வச்ச உள்ளங்களே -இராஜ்குமார்

உசுர உருக வச்ச உள்ளங்களே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒடைஞ்ச செவுத்தோரம்
ஒரு வா சோத்த வடிச்சாலும்
நிறைஞ்ச மனசோட ....பல
உசுர காக்குற அம்மாவுக்கும் ...

ஊரு மாறி போனாலும்
எவ்ளோ கஷ்டம் வந்தாலும்
சின்ன புள்ளையா சிரிச்சிட்டு..
எனுக்கும் அம்மாவான அண்ணிக்கும்...

புருஷனை எழந்தாலும்
தம்பி நெனப்ப பொதச்சிட்டு
அவன் வாசபடிய மெதிக்காம
தனியா வாழுற அத்தைக்கும் ....

ஏரி கரைய கடக்கையில
நூறுநாளு வேலை செஞ்சி
தெனம் எண்பதுக்கே தெணரும்
வீட்ட நடத்துற வீர உள்ளங்களுக்கும் ..

மிஞ்சி மிஞ்சி கேட்டாலும்
செஞ்சி வச்ச செலையாட்டம்
ஒத்த வார்த்த சொல்லாம
உசுர உறுஞ்சி முறைக்குற
மாமன் பொண்ணு தேனுக்கும் ...

திட்டி திட்டி வலிச்சாலும்
கொலுசு கட்டி விட்டமாறி
கொஞ்சி கொஞ்சி கொட்டுற
கொழந்த மனசு தங்கச்சிகளுக்கும்....

ஒத்த நாளாவது நா சமச்சி
தட்டு நெறைய குவிச்சி வச்சி
மொத்த உசுர உருக வைக்கணும் ..
திண்ண பூரா வளையலா சிரிக்கணும் ..

- இராஜ்குமார்

.....மகளிர் தின வாழ்த்துக்கள் ..

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (8-Mar-15, 10:18 am)
பார்வை : 2275

மேலே