யாரவளோ

உன் ஊரென்ன
உன் பேரென்ன
ஏதொன்றும்
என் காதல் அறியாதே
சிறு கண்ணாலே
எனை சிறை வைத்தாய்
என் கால்கள்
உன் பாதை அறியாதே
பெண்ணே! பெண்ணே!
உன்னாலே
என்னோடு
நித்தம் நித்தம்
போர் தான்....
வழி தேடி
அலைகின்றேன்
உன்னை பெற்ற
ஊர்தான்....
நீ நிலவா
மழையா
வாசப் பூவா
தேடி இங்கு
நான் தொலைந்தேன்...
என்னுயிரே! என்னுயிரே!
எனை வந்து சேராயோ
என் வாழ்க்கை நீயே தானே
ஒரு பொய் மானையே
இங்கு நான் தேடினேன்
இன்று நடுகாட்டில்
தவித்து நின்றேன்....