கல்யாணம்
கல்யாணம்!
காயாய் இருந்து
கனிந்த பழமாய் சுவையாய்
வாழும் வாழ்க்கையின் அங்கீகாரம்!
கல்யாணம்!
வாழ்க்கையின் வசந்த கால அத்தியாயம்!
கல்யாணம்!
இணை கூடும் இளந்தென்றல்
சிலிர்ப்பு!
கல்யாணம்!
கவிதை நளினமாய் காலம்
காட்டும் ஓர் மனதின் ஆட்சி!
கல்யாணம்!
சமூக சம்பிரதாய சாட்சியாய்
சகமாய் அகம் கொள்ளும் ஆனந்தம்!
கல்யாணம்!
கன்னியராய் காளையராய் காலம்
மறக்கும் காதல் கோலம்!