வரங்களில் சில பிழைத்திருத்தங்கள்

முதுகுத்தண்டை
துளைத்த ஊசிகளின்
எண்ணிக்கையில்
பயந்து போனாள்
மேலும்...

மயங்கியவளின்
அடிவயிற்றை கீறி
உயிரில் பாதியை
உருவும்போது

வெற்றிடம் உணர
அவள் தாய்மையை
என்னவோ செய்தது..

பிள்ளையின் அழுகுரல்
மூடிய விழிகளில்
கால் நனைக்க

அப்போது சுரந்த
ஒருதுளி கண்ணீர்
தாய்பாலினும்
மேன்மையானதே

இறுக கடித்து
பல்லிறக்கிய தையல்கள்
முழுமையாய்
அவளை பிணமாக்கிட

தும்பல், இரும்பல்,
ஏன் சிரிப்பும் கூட
அவளின் தற்போதைய
கொடுஞ்சாபங்களாக

உடன் சேர்ந்தே
கட்டுப்பாடும்....
கேட்டு- கிடைத்ததுமில்லை
கொடுத்து- வாங்கியதுமில்லை
பெண்ணவளுக்கு தாய்மையில்
எழுதபடாத உரிமைகளில்
ஒன்று...??

அலுவலகத்திற்கு வழியனுப்பி
அழும் குழந்தைக்கு
பசியாற்றுவதற்குள்ளாகவே
அவளுக்கான சப்பாத்தி
தீய்ந்திருக்கும்

தினம் வீட்டு வேளைகள்
முடித்து நிமிர்கையில்
முதுகுத்தண்டை இரண்டாய்
வெட்டியதாகவே வீழ்ந்தாள்
விழியின் உயிரணுக்களை
தூண்டிடாத இருண்மைகளில்

ஓர்நாள்
கண்ணாடியின் முன்
அடிக்கடி உறைபவளாக
எதை தேடினாளோ
அவள்...??

இழப்புகள் ஒன்றல்லவே...!!

எழுதியவர் : மணிமேகலை (13-Mar-15, 11:48 am)
பார்வை : 120

மேலே