ஆசை

ஆணை விட
பெண்ணுக்கே
ஆசை அதிகமாம்
நான் கூறவில்லை
அவர்கள் பெயர்களே
கூறியது
இறுதியில் ஆ என ஒலித்து!

**********************
ஆண்களின்
ஆசைக்கு
முடிவு இருப்பதால் என்னவோ
பெரும்பாலும் பெயர் முற்றுப்புள்ளியாய்
ஈற்றில் முடிந்திருக்கும்!

**********************

பெண்களின்
ஆசைக்கு
முடிவு இல்லாததால் என்னவோ
பெரும்பாலும்
ஆ என்று ஒலித்தே
ஈற்றில் முடித்திருக்கும்!

************************

ஐயம் இருந்தால்
இப்போதே
உங்கள் பெயரை
சோதித்து விடுங்கள்
வாய்விட்டு கொஞ்சம்
சிரித்துவிடுங்கள் !

**************************

(கல்லூரியில் ஆசிரியர் கூறிய நகைச்சுவை இக்கவிதையாய் உருவெடுத்தது )

எழுதியவர் : கவிபுத்திரன் (13-Mar-15, 10:55 am)
Tanglish : aasai
பார்வை : 585

மேலே