சிரிக்கிறார்கள்
உறங்குகிறார்கள்
- விழிக்க விரும்பாதவர்கள்
பேசுகிறார்கள்
- கேட்க விரும்பாதவர்கள்
சேர்க்கிறார்கள்
- கொடுக்க விரும்பாதவர்கள்
அழிக்கிறார்கள்
- ஆக்க விரும்பாதவர்கள்
உழைக்கிறார்கள்
- சோம்பி இராதவர்கள்
விழிக்கிறார்கள்
- உண்மை விரும்பிகள்
கேட்கிறார்கள்
- தன்னை உணர்ந்தவர்கள்
படிக்கிறார்கள்
- பாடம் விரும்புவர்கள்
நினைக்கிறார்கள்
- நிலைக்கும் யாவுமென
நடிக்கிறார்கள்
- நாடகம் நடக்குதென
சிந்திக்கிறார்கள்
- சித்தம் தெளிந்தவர்கள்
தெளிகிறார்கள்
- தேவைகள் தீர்ந்தபின்
உணர்கிறார்கள்
- காலம் கடந்தபின்
உரைக்கிறார்கள்
- புதிதாய்க் கண்டதென
மகிழ்கிறார்கள்
- சாதனை புரிந்தோமென
சிரிக்கிறார்கள்
- சின்னக் குழந்தைகள்