இரையாக போகின்றேன்

என்ன.!!
ஆச்சிரியக் குறியுமில்லை .
எதற்கு .?
கேள்விக்குரியுமில்லை .
இரையாக போகின்றேன்
ஊர்ந்திடும் எறும்புகளுக்கு இல்லை.
உரமாக போகின்றேன்
வளர்ந்திடும் செடிகளுக்கும் இல்லை .
முற்றும் என்று முற்றுப்புள்ளி
வைத்திட
இது சிறு கதையும் இல்லை .
ஆம்
காமவெறி பிடித்த கழுகுகள்
காத்திருக்கின்றன
உயிரோடு என்னை உணவாக்க
இங்கே
நான் கழுகுகள்
வெறிதீர்த்தால்
அங்கே
கண்ணீரில் மடியும்
கருணையில்ல பிஞ்சிகளின்
பசி தீரும் .
உண்மையாய் உழைத்தால்
கிடைக்காத ஊதியம்
உடலை கொடுத்தால்
இரட்டிப்பாய் கிடைக்குமாம்
எனக்கென்று எதுவும் இல்லாத
போது
இருப்பதை கொடுக்க முடிவெடுத்து விட்டேன் .
இருட்டினில் நான் வாழ்ந்தால்
ஒளிகிடைக்கும்
அநாதை இல்லத்திற்கு .