நிரந்தரமாய் அல்ல

உன் பிரிவால் செம்மண்தரையாகிப் போன என் மனதிற்க்குள்
சிறு நொடி நீ திரிந்து சென்றாலும்

கிளம்பிய புழுதி போல்
என் கவலைகள் காற்றில்
பறக்கின்றன...

மறுநொடியே
என் கவலை அடக்க
சிறுதுளி தூரலாய் மனதில் தூவும்
உன் விரலான என் விரலாய்
என் விரலான உன் விரலாய்
கரம் பற்றி கடந்த தார்சாலை
நினைவு அலை...

நிம்மதி தரும்
சில நிமிடம் மட்டும்

"நிரந்தரமாய் அல்ல"...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (14-Mar-15, 6:30 pm)
Tanglish : nirantharamai alla
பார்வை : 487

மேலே