உன் நினைவும் எனக்கு வரம் தானடி 555

என்னுயிரே...

என் கண்ணுக்குள் இருக்கும்
உன் பிம்பம் மறைந்துவிடுமென்று...

இமைகளை மூடாமலே
உறங்குகிறேன்...

உன் நினைவில்
நித்தம் நித்தம் என்னுயிரே...

சிலர் என்னை பித்தன்
என்றார்கள்...

உன்னில் நான் வாழும் நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...

எனக்கு சுகம் தானடி...

என்னைவிட்டு நீ பிரிந்த பின்பும்
எனக்குள் சந்தோசம் தானடி...

என்னைவிட்டு பிரிந்தது
நீ மட்டும் தானடி...

உன் நினைவுகள்
இல்லையடி...

உன்னாலும் முடியாது...

என்னில் இருக்கும் உன்
நினைவுகளை பிரித்தெடுக்க...

உன் நினைவில் வாழும்
என்னை ஜித்தன் என்கிறார்கள்...

உன் நினைவும்
எனக்கு வரம்தானடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Mar-15, 9:26 pm)
பார்வை : 764

மேலே