வெற்றியின் திறவுகோல்
வாய்புகள் வந்து வாயில் கதவை தட்டும்
என்று இருந்து விடாதே
நல்ல நேரம் வரட்டும் என்று
நீயும் காத்து கிடக்காதே
முயற்சி செய்தால் முன்னேற்றம் உண்டு
என்பதை மறந்து விடாதே
தோல்வியை கண்டு நீயும்
துவண்டு விடாதே
சோம்பல் நீக்கி சுறு சுறுப்பாய் செயல் பட்டால்
துன்பங்கள் உன்னை நெருங்காதே
எண்ணத்தில் சுவாசத்தில் பேச்சில் செயலில்
இலக்கை நிறுத்து
அந்த இலக்கை நோக்கியே உன்
பயணம் தொடரட்டும்
உயர்ந்த நிலையை நீ அடையும்போது
நடந்து வந்த பாதையை மறந்து விடாதே
வெற்றிகள் உன் வசமாகும்
- கோவை உதயன் -