ட்ரென்டில் கடைந்தெடுத்து
ஐஸோடு ஐஸ் சேர்ந்து
ஐஸாகி நிக்கயில்
வேர்ட்ஸ் எல்லாம்
சும்மா தான்டி.
பக்கம் வந்தா நீ மிஸ்ட்டு
தூரம் போனா நீ ஹீட்டு
மேஜிக் செய்யும்
ஃபயரு தான் நீ.
சுத்தமான முத்தம் தந்து
சத்தம் போடும் நெஞ்சுக்காக
மில்க் ஸேக்கில்
ஹனிய ஊத்து நீ.
காய்ச்சல் வந்து
படுத்த போதும்
கூல் வாட்டர் நான் குடிச்சேன்
உள்ளுக்குள்ள நீயிருக்கடி.
படமெடுக்கும் பணக்காரன்
வாவ் என்று கைத்தட்டினான்.
பாட்டெழுதும் தமிழ்க்காரன் நான்
யோவ் எல்லாமே குறள் என்றேன்.
மலைத்தவன் திறந்துவிட்டான்
பல கிலோமீட்டர் பரப்பில்
குறளுக்காகவே ஒரு நூலகத்தை.
--கனா காண்பவன்.