ஒருநாள் கடவுளானால்

கண் இல்லாதவர்க்கு..
கனவுகளைத் தந்துவிட்டு
கால் இல்லாதவர்க்கு..
தூரம்கொண்டு வந்துவிட்டு
வாய் இல்லாதவர்க்கு..
பசிக்கச்சொல்லித் தந்துவிட்டு
கடவுளெனப் பெயரெடுத்து..
காற்றாய் வாழ்பவனை
உடற்கொண்டு உயிர்கொண்டு..
உடலிலோர் குறைகொண்டு
மனமில்லா மனிதரிடையே..
மாற்றுத்திறனாளியாக்க வேண்டும்
மாற்றுத்திறனாளி மனதையும்..
அறியவைத்து திருத்தவேண்டும்
ஒருநாள் முதல்வன்போல்
ஒருநாள் கடவுளானால்..
இதுதான் என்பணி

எழுதியவர் : moorthi (14-Mar-15, 6:42 pm)
பார்வை : 67

மேலே