மூன்றாம் தலைமுறை நாட்கள்

தேய்பிறைக்கால நிலாக்களின்
ரம்மியங்களில் தவழ்ந்தே
உறக்கம் அடுத்த நாட்களுக்காய்
பதுங்கி விட்டிருக்கும்,,,

தவறிய கணங்களுக்கு..
சாண வாசனைகளோ... தூரத்துக் கோவில்
துதிப்பாடல்களோ
இமைகளைத் தறிகளாக்கியிருக்கும்....


அப்பொழுதிலிருந்து
அன்றைய இரவின் பத்துமணிவரை
நாட்பொழுதொன்றின்
இயங்குகாலம்....

ரத்தம் உணர்வுகளுக்காக
மட்டும் கொதித்திருக்கும்...

கொழுப்பும் சர்க்கரையும்
தேவைக்கெனவே வைத்திருந்தன
கேப்பைக்கூழ் மஞ்சட்டிகளும்
சடுகுடுக் களங்களும்...

கறிமுழுகிக் குடிக்கத் தவறியிருந்த
எண்ணைக் குப்பிகள்
தலைமுழுகப்
பதப்படுத்தப் பட்டிருந்தது...

புண்ணாக்கு திண்றேரியிருந்த
நாடுப்பசுக்கள்.. தன்
தலைநகரகத்துச் சகாக்களை
வர்ணனைகளுக்கு மட்டுமே
விட்டிருந்தது........

எல்லாம் மாற்றியிருந்த
மூன்றாம் தலைமுறைகளுக்கும்
ரத்தம் கொதித்திருந்தது....

காரணம்.... இரண்டாம்
தலைமுறைகளுக்காகச் சொல்லப்பட்டது
அல்ல...!!

எழுதியவர் : நல்லை.சரவணா (14-Mar-15, 6:19 pm)
பார்வை : 89

மேலே