லாப் டாப் நிலா

முகில் போர்வையை
நீக்கி எட்டிப் பார்த்தது நிலா

பொழியும் வரை
பொறுக்கக் கூடாதா
என்றது முகில்

பொழிவதானால்
விரைந்து பொழி
நான் கவிஞர்களை
பார்க்க வேண்டும்
கவிஞர்கள் என்னைப்
பார்க்க வேண்டும்
என்னை எழுத வேண்டும்
என்றது நிலா

என்னைப் பார்க்க வேண்டாமா
என்னைப் எழுத வேண்டாமா
என்று கேட்டது முகில்

பொழியாத வானத்தை
பாடுவானா கவிஞன் ?
சோம்பலை உதறி
சுறு சுறுப்பாய் இயங்கு
சித்திர முகிலே சீக்கிரம் பொழி
என்று உரக்கச் சொன்னது நிலா

பொழிந்து தீர்த்தது முகில்
தூய வானில்
நடந்து வந்தது வெண்ணிலா
லாப் டாப்புடன்
வானைப் பார்த்த
என்னைப் பார்த்து
காதலில் சிரித்தது நிலா !

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Mar-15, 11:26 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே