போர்மூட்டும் ஐயமில்லை

ஏற்றமிடும் ஓடையை காணாமல் நானேங்குகிறேன்
மைனாக்களின் பாசையை கேட்காமல் நானேங்குகிறேன்

வட்டமிடும் பட்டாம்பூச்சியை வலைவீசி தேடுகிறேன்
சுட்டியான சிட்டுக்குருவியை சிறகடித்து தேடுகிறேன்
வசந்த காலத்திலே ரீங்காரமிடும் மதுகரத்தின்
மையலோசையை கேட்கநானும் ஏங்குகி றேன் ...

நாற்றுநட்ட வயல்களை காணாமல் நானேங்குகிறேன்
வரப்பிலூறும் நத்தையை பாராமல் நானேங்குகிறேன்

நிரம்பிய கிணற்று நீரையள்ளி குடித்தக்
காலத்தை காணநானும் ஓடுகிறேன் -காணமல்
கானல் நீராய் கரைகிறேன்,பருவமழை
பெருத்து பாதையெங்கும் கசியும் நீரால்

காலைக் கடிக்கும் சேற்றுப் புண்ணுக்கு
வைத்தியம் பார்த்த நாட்களை எண்ணிப்
பார்க்கிறேன் பச்சைப் புளியை சுடவே
இன்று மறந்துபோய் நிற்கிறேன் .

வாய்க்கால் வரப்புநீரை காணாமல் நானேங்குகிறேன்
குடிநீரென்ற வரியைகண்டு வாய்பிளந்து நிற்கிறேன் ...

.நாவறண்டு
எதிர்காலம் பாலைவன நவ்வியாய்
செந்நாயின் நாச்சொட்டும் உமிழ்நீரை
பருகவே போர்மூட்டும் ஐயமில்லை ...

எழுதியவர் : பிரியாராம் (17-Mar-15, 12:20 pm)
பார்வை : 311

மேலே